Wednesday, 30 September 2015

கணினி வளர்ச்சியில் தமிழ்


கணினி வளர்ச்சியில் தமிழின் பங்கு மகத்தானது என்று சொன்னால் அது மிகையில்லை. காரணம் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் மூத்தவள் என் தாய் தமிழ். இன்று விஞ்ஞான உலகில் நாம் பல சாதனைகளை படைத்தும், படைத்துக் கொண்டும்  உள்ளோமா அதைப் போல கணினி வளர்ச்சியில் நமது தமிழும் அசுர வளர்ச்சி கண்டு வந்துள்ளது. ஒவ்வாரு துறையின் வளர்ச்சி பற்றி கூற முடியாது என்பதால் இன்றைய சூழலில் இளைஞர்களின் இரண்டாவது உலகம் என நம்பப்படும் வெள்ளித்திரையில் தமிழ் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்து அதற்கான அங்கீகாரம் நாள்தோறும் கிடைத்தது நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் கணினி வளர்ச்சியால் பல தமிழ் படங்கள் தேசிய விருதுகளை அள்ளி வந்துள்ளது. அவற்றில் சில "தங்க மீன்கள் " படத்தில் இடம்பெறும் "ஆனந்த யாழை மீட்டுகிறாள் மற்றும் "காக்கா முட்டை" படம்.மேலும் கணினி பயன்பாடு விரிவானதால் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் வளர்ச்சியில் தற்பொழுது இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இரண்டாம் மொழியாக பாட சாலைகளில் கற்பிக்கப்படுகிறது. மேலும் மேனாள் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் கூட ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் பொழுது புறநானூறு பாடல் பெருமையை உலகறியச் செய்து தமிழின் பெருமையை பறைசாற்றினார். இன்று பல ஆராய்ச்சி மாணவர்கள் கணினி மூலம் பல செயலிகள் உருவாக்கி அதை உலகிற்கு அறிமுகம் செய்து பலரும் பயன்படுத்தும் வகையில் கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது தமிழுக்கு. சமீபத்தில் கூட சட்ட சபையில் பெண்களுக்காக இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது கணக்குகளை எளிதில் பராமரிக்க ஒரு செயலி உருவாக்கி அதன் அறிவிப்பை விதி எண் 110 ன் கீழ் முதல்வர் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளது தமிழுக்குப் பெருமையே. இன்று அரசுத் துறைகள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு அதிக முன்னுரிமை தமிழுக்குத் தான் என்பதில் ஐயமில்லை. ஆங்கிலேய ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்ட நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நாடாளுமன்றத்திலும்,வீதிகளிலும் போராட்டம் வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் சாத்தியமானது கணினி வளர்ச்சியில் தானே. இதையெல்லாம் விட கணினியில் ஒரு பெரிய புரட்சியை  ஆராய்ச்சி மாணவி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  ஆம்! தமிழில் நாம் தட்டச்சு செய்தால் அது மாற்று மொழியில் எவ்வித இலக்கண பிழையின்றி மொழியாக்கம் செய்யும் செயலியை உருவாக்கி அதில் புதிய மைல்கல் சாதனை படைத்து அது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சில நேரங்களில் நாம் நமது குணத்தை மாற்றுவோம் ஆனால் கணினி நிலையான ஆட்சியை தமிழுக்கு ஆற்றி வருகிறது. ஒரு முறை சிங்கப்பூர் தந்தை என்று அழைக்கப்படும் திரு. லீ குவான் யூ இவ்வாறு கூறினார். "சிங்கப்பூர் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் தமிழர்கள். இந்திய மொழி என்றால் தமிழ் மொழி. எனவே தமிழ் தான் இங்கு ஆட்சி மொழி. இந்திக்கு இங்கு இடமில்லை "என்றார். இதற்கு காரணம் கணினியும், புலம்பெயர்ந்த தமிழர்களும் தான். கணினிசார் துறையில் தமிழின் வளர்ச்சியை உலகமே கண்டு வியந்துள்ளது . இந்தியாவில் எப்பொழுது தாராளமயமாக்கல் கொண்டு வரப்பட்டதோ அப்பொழுதே நம் தமிழ் மொழியும் உலக பொதுமொழியாக்க வேண்டும் என்று ஐ.நா வில்  1991 சூன் திங்கள் 29 கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கான பதிலும் அதே ஆண்டு சூலை 23 ல் உங்களுடைய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் நகலை எங்களுடைய அவைக்கு அனுப்பி வைக்கவும் நாங்களும் பரிசீலனை செய்கிறோம் என்று கூறியுள்ளார்கள். இதன் முயற்சியாக பல விதமான சரித்திரங்கள் கணினி வளர்ச்சியில் தமிழ் கண்டு வருகிறது. "காயும் ஒரு நாள் கனியாகும் நம் கனவும் ஒரு நாள் நனவாகும் "என்ற கவிஞரின் வரிகளுக்கிணங்க நாமும் உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழின் சேவை தொடரும் என்று நம்பலாம்.
           வாழ்க தமிழ்
           வளர்க கணினி
புதுகை அடிமை.

4 comments:

 1. நண்பரே, நமது போட்டி விதிகளின் படியான சில உறுதிமொழிகளை இணைத்து, மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறோம். (இன்று இரவு11.59க்குள்) விதிகளோடு , அவ்வாறாக அனுப்பப்பட்ட ஏனைய போட்டிப் படைப்புகளையும் பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html நன்றி.

  ReplyDelete
 2. "சிங்கப்பூர் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் தமிழர்கள். இந்திய மொழி என்றால் தமிழ் மொழி. எனவே தமிழ் தான் இங்கு ஆட்சி மொழி. இந்திக்கு இங்கு இடமில்லை
  தமிழர்களின் உழைப்பு அத்தகையது
  வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி ஐயா

   Delete
 3. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete